ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » திருச்செந்தூரில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், திருச்செந்தூர் கே.டி.எம். மற்றும் குறிஞ்சி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் திருச்செந்தூர் இரா.தங்கமணி, உடன்குடி பி.சிவசுப்பிரமணியன், சாத்தான்குளம் வி.பி.ஜனார்த்தனம், ஆழ்வார்திருநகரி (கிழக்கு) கே.முருகேசன், (மேற்கு) வி.கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் (மேற்கு) என்.நல்லகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.கதிர்வேல், முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஜஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. வெ.ராணி வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சு.கு.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கூட்டத்தில், எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு நன்றி தெரிவிப்பது, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். கல்வி கடன் வட்டியை தள்ளுபடி செய்ததற்கும், பழனி-திருச்செந்தூர் தினசரி ரயில் இயக்கியதற்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கன்னியாகுமரி  திருச்செந்தூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

ராஜீவ்கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் முடிவை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வழக்குரைஞர் மகேந்திரன், மாவட்டச் செயலர்கள் நா.லோகநாதன், ஐந்துகோடி எஸ்.அரிகரன், வி.கே.எம்.பாஸ்கரன், எஸ்.டி.சண்முகம், ஹர்பான்சிங், நடராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.ஆதிலிங்கம், எஸ்.பேச்சியம்மாள், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.டி.எஸ்.அருள், முன்னாள் தூத்துக்குடி மாநகரத் தலைவர் சி.எஸ்.முரளிதரன், முன்னாள் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் க.பெருமாள்சாமி, மயிலை பி.பெரியசாமி, டி.சிவபால், ஆழ்வை வட்டார பொருளாளர் அருள்சீலன், நகரத் தலைவர்கள் ராஜாமணி, சாத்தான்குளம் ஜெயபிரகாஷ், ஆழ்வார்திருநகரி இளங்கோ நயினார், ஆத்தூர் ஸ்ரீராம், கானம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசேகர் வரவேற்றார். திருச்செந்தூர் நகரத் தலைவர் குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.Courtesy: Dinamani.com

Tags: Daily News

0 comments

Leave a Reply