ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.


ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
 இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் பிப். 9ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை இரவு விக்னேஷ்வர பூஜை மற்றும் தன பூஜையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பக்த ஜன சபை செயலர் பி.கே.எஸ்.கந்தையா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
 இதில், பன்னிரு திருமுறை குழு மகளிர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை கணபதி ஹோமம் நடைபெறுகிறது, வியாழக்கிழமை மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

Courtesy : The Dinamani.com

0 comments

Leave a Reply