ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » மார்ச் 4-ல் திருச்செந்தூரில்அய்யா வைகுண்டர் அவதார தின விழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 182-வது அவதார தின விழா மார்ச் 4-ம் தேதி  நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு மார்ச் 3-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, மாலையில் பணிவிடை, அய்யா வாகனப் பவனி, அன்னதர்மம் நடைபெறுகிறது.

4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதல், அவதார விழா பணிவிடை மற்றும் அன்னதர்மம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவர் பி.சுந்தரபாண்டி, செயலர் எஸ்.தர்மர், பொருளாளர் ஏ.ராமையா, உதவி தலைவர் எஸ்.தங்கத்துரை, துணைச்செயலர் ஏ.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


courtesy: Dinamani.com

Tags: Daily News

0 comments

Leave a Reply