ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » திருச்செந்தூரில் ரூ.1.12 கோடியில் நலத்திட்ட உதவி

திருச்செந்தூரில், பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ. 1.12 கோடி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 150. 5 பவுன் தங்கத்தை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் திருச்செந்தூர் லி.ஹேமலதா லிங்ககுமார், உடன்குடி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு திருச்செந்தூர் மற்றும் உடன்குடி ஒன்றியங்களுக்குள்பட்ட 301 பயனாளிகளுக்கு 150.5 பவுன் தாலிக்கு தங்கம் மற்றும் 1 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் ப.நல்லசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், வேலுமயில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, செயல்அலுவலர் கொ.இராஜையா, திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், அதிமுக ஒன்றியச் செயலர் அமலி டி.ராஜன், நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன், மாவட்ட ஜெ. பேரவை இணைச்செயலர் மு.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, மாவட்ட வழக்குரைஞரணி துணைத்தலைவர் ஜெ.திலீப்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பி.டி.ஆர்.ராஜகோபால், சு.விஜயராகவன், கு.முருகேசன், பூந்தோட்டம் பி.மனோகரன், தேவராஜ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றியச் செயலர் லி.லிங்ககுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முத்துவிநாயகம் வரவேற்றார். சமூக நல விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


Courtesy: Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply