ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்று மாவட்டக் கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத் தேர்வில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்று மாவட்டக் கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்க ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 73 விற்பனையாளர்கள், 17 எடையாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. நேர்முகத்தேர்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு முற்றிலும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியில் சேர்வதற்கான உத்தரவு வழங்கப்படும்.
இதில் எந்தவொரு சிபாரிசுக்கும் இடமில்லாத வகையில் இந்த பணி நடந்து வருகிறது. இந்த இரண்டு பணியிடங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டவர்கள் வேலை பெறுவதற்காக எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது இடைத்தரகர்களை நம்பியோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தகுதியுள்ளவர்களுக்கு எவ்வித சிபாரிசுகளுக்கும் இடமின்றி நேரடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.என்று தமது அறிக்கையொன்றில், கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a Reply