ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , Daily News , News , ஆறுமுகநேரி » மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியுடன் காந்திஜெயந்தி ஆறுமுகநேரியில் கொண்டாடப்பட்டதுசுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கமும் காந்திஜி நுகர்வோர் பேரவையும் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டியை நடத்தி கேடயங்களையும் மெடல்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.ஆறுமுகநேரி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தியாகிகள் சங்கத்தலைவர் தியாகி எஸ்.பொன்னையாப்பிள்ளை தலைமை தாங்கினார்.ஆறுமுகநேரி பேரூராட்சித்தலைவர் ஆ.கல்யாணசுந்தரம் ஓவியப்போட்டியைத் தொடங்கி வைத்தார்.ஆறுமுகநேரி காந்திஜி நுகர்வோர் பேரவைத் தலைவர் பி.ஏ.சுந்தர்ராஜ், துணைத்தலைவர்கள் கா.சுபாஷ் சந்திரபோஸ், ந.பாலகிருஷ்ணன் ஆச்சாரி,காந்திஜி நுகர்வோர் பேரவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பா.பார்வதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நேரு காமராஜ் சோசலிஷ்ட் இயக்கத்தலைவர் தூ.இராமஜெயம்,திருச்செந்தூர் வட்டார இரயில் பயணியர் சங்கத்தலைவர் இரா.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.தியாகிகள் வாரிசுகள் சங்கக் கூட்டத்தில் மாநில அரசு பென்சனைக் கூட்டிய தமிழக அரசுக்கு நன்றிதெரிவிக்கப்பட்டது.மணிமுத்தாறு அணையைக் கட்டுவித்த கே.டி.கோசல்ராம் அவர்களின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட மத்திய,மாநில அரசுகளைக் கோருவது என் தீர்மானிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி அளவில் நுகர்வோர் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.காந்திஜி நுகர்வோர் பேரவை நிறுவனத்தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து தலைமை தாங்கினார்.அ.இராஜநாயகம்,கோவில்பட்டி கே.எஸ்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நுகர்வோர் விழிப்புணர்வு உரையாடல் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதி காந்திஜி நுகர்வோர் பேரவையின் தலைவர் கோவில்பட்டி எஸ்.செல்வம்,செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம்,பொருளாளர் எம்.அம்பலவாணன்,தூத்துக்குடி தெற்கு மாவட்டஅமைப்பாளர் திருச்செந்தூர் சு.ஜெயந்திநாதர்,வட்டாரச் செயலாளர் எஸ்.கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3 மணிக்கு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள் விபரம் எல்.கே.ஜி-யு.கே.ஜி 1. ஆம் பரிசு.கே.சோபனா லட்சுமி பிரியா, யு.கே.ஜி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம். 2.ஆம் பரிசு.எம்.எஸ்.சுபீஷ் சேதுபதி, யு.கே.ஜி கமலாவதி மேல்நிலைப்பள்ளி, 3 பரிசு.கே.கீர்திகாபானு, யு.கே.ஜி கமலாவதிமேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
1 ஆம் வகுப்பு-2 ஆம் வகுப்பு 1 ஆம் பரிசு.ஆர்.ஆண்ட்ரியா, ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 2.ஆம் பரிசு.பி.அனிஷா, ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 3.ஆம் பரிசு.கே.பரணி வேலன், காமராஜ் சோமசுந்தரி நர்சரி பிரைமரிபள்ளி ஆறுமுகநேரி3ஆம் வகுப்பு-4 ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.பி.எஸ்.வெங்கடேசன், கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
2.ஆம் பரிசு.ஜி.மாரீஷ், கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.  3.ஆம் பரிசு.ஆர்.விஷ்ணு சிவப்பிரியா கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
5 ஆம் வகுப்பு-6ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.ஏ.கீர்த்தனாதேவி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.2.ஆம் பரிசு.ஆர்.ஜோஷ் ரூபிகா  ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 3.ஆம் பரிசு.எம்.எஸ்.பிரஷா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்
7ஆம் வகுப்பு-8ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.எம்.எஸ்.ராஜா சேதுபதி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 2.ஆம் பரிசு.எம்.தில்லை நம்பிராஜன் எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி.3.ஆம் பரிசு.எல்.சிவசங்கர்,அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,திருச்செந்தூர்.9ஆம் வகுப்பு-10ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.ஏ.சுஸ்மிதா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 2.ஆம் பரிசு.ஆர்.திவ்யா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 3.ஆம் பரிசு.பி.கிரிஷ்வின் ஏ.கற்றார், அனிதாகுமரன் மேல்நிலைப்பள்ளி,தண்டுபத்து.11ஆம் வகுப்பு-12ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.டி.ஆர்.ரிஷாந்த்,புனித லசால் மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி.2.ஆம் பரிசு.எஸ்.தனு,ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல்நிலைப்பள்ளி.திருச்செந்தூர்.

0 comments

Leave a Reply