ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » தலை சுற்றலா ? - இன்றைய பாட்டி வைத்தியம்

தலை சுற்றலா ? - எளிய மருத்துவம்

தலை சுற்றல் வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது .   மாறாக எப்பொழுதும் படுத்து தான் இருக்க முடியும் .   இப்படிப்பட்ட தலை சுற்றலுக்கு என்ன எளிய மருத்துவம் உள்ளது என்பதை நாம் காணலாம் .

 கொத்தமல்லி , கசகசா ,  பருத்திவிதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டு சர்க்கரை  சேர்த்து  காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீர் குடிக்க தலைசுற்று  , கிறுகிறுப்பு நீங்கும் .

அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்த அழுத்தம் இருப்பதாக் அர்த்தம் .  முற்றிய இஞ்சியை நசுக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள் .  தலைசுற்றும் நிற்க்கும்.  ப்ளட் பிரசரும் குறையும் .

ஏலக்காயை எடுத்து அதை இடித்து பனை வெல்லம் கலந்து சாப்பிட்டால் தலை சுற்று சுகமாகும் .

பித்தத்தினால் தலை சுற்றலா ..?  ஒரு துண்டு இஞ்சி ,  1  ஸ்பூன் சீரகம் ,  1  ஸ்பூன் தனியா ,  இவற்றை மிக்சியில் நைசாக அரைத்து வடிகட்டி , லேசாக சுட வைத்து , தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1  மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட தலை சுற்றல் பிரச்சினை குணமாகும் .

வெளியில் போய் விட்டு வந்தால் கண்களை இருட்டி கொண்டு தளி சுற்றுவது போல இருக்கும் .  கொட்டை புளி  , ஒரு துண்டு வெல்லம் ,  ஒரு ஸ்பூன் சீரகம்  மூன்றையும் ஒன்றாக நசுக்கி , உருட்டி , வாயில் அடக்கி கொண்டு , கண்களை இறுக மூடிக்கொண்டு  படுத்து கொள்ளவும் . தலையணை கூடாது .   இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும் .

  தொடர்ந்து தலை சுற்றல் இருந்து வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது .   எதை குறித்தும் கவலைபடாதீர்கள் .   ரத்த அழுத்தம் கூடினால் தலை சுற்றல் வரும் .   இடுக்கண் வருங்கால் நகுக .... எப்பொழுது நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

0 comments

Leave a Reply