ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Schools » கல்விநிறுவனங்கள்


கல்விநிறுவனங்கள்
“வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி”
என்று முழக்கமிட்டமகாகவியின் எண்ணங்கள் வண்ணங்களாக ஆறுமுகநேரியில் மொத்தம் 30 கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஒவ்வொரு பள்ளியின் வரலாற்றிலும் பல பெரியவர்கள் தன்னலங்கருதா இளைஞர்கள் தாய்மார்களின் பங்களிப்புகள் உள்ளன. கோயிலுக்கு இணையாக கல்விக் கூடங்கள் கருதப்பட்டன. பள்ளி விழாக்களில் பங்கேற்பதைப் பொதுமக்கள் பெற்றோர்கள் மகிழ்வின் அடையாளமாகக் கருதுகின்றனர்.

கல்லூரி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, இராணிமகாராஜபுரம்

மேல்நிலைப்பள்ளிகள்
  • கா.ஆ.மேல்நிலைப்பள்ளி
  • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
  • இந்து மேல் நிலைப்பள்ளி
  • கமலாவதி மேல்நிலைப்பள்ளி

நடுநிலைப்பள்ளிகள்
இந்து சரஸ்வதி நடுநிலைப்பள்ளிஆறுமுகநேரி
சந்தன சம நடுநிலைப்பள்ளிமடத்துவிளை
டி.டி.டி.ஏ.நடுநிலைப் பள்ளிராஜமன்னியபுரம்.
தொடக்கப்பள்ளிகள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிவாலவிளை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிசெல்வராஜபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிவன்னி மாநகரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிபேயன்விளை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிநாலாயிரமுடையார்குளம்
இந்து தொடக்கப் பள்ளி           பேயன்விளை
இந்து தொடக்கப் பள்ளி           ஆறுமுகநேரி
அருள் நெறி இந்து தொடக்கப் பள்ளிதிருமலையப்பப்புரம்
ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிஇராணிமகாராஜபுரம்
புனித மரியன்னை நடுநிலைப் பள்ளிஅடைக்கலாபுரம்
டி.டி.டி.ஏ. பீடர் தொடக்கப் பள்ளிஆறுமுகநேரி
டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிசுப்பிரமணியபுரம்
டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிபூவரசூர்
டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிமுத்துகிருஷ்ணாபுரம்
டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிமடத்துவிளை
திரவியம் தொடக்கப் பள்ளிகாணியாளர்தெரு
ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளிஅடைக்கலாபுரம்
மெட்ரிகுடீலசன் பள்ளிகள்  
  • காமராஜ் சோமசுந்தரி ஆங்கிலப்பள்ளி
  • அன்னம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி
  • கே.ஏ.நர்சரி & பிரைமரி பள்ளி
  • ஸ்ரீ சத்ய சாயி நர்சரி தொடக்கப்பள்ளி
  • ஏ++ மெட்ரிகுலேசன் பள்ளி
கைத்தொழில் பயிற்சி நிறுவனம்
  • தையல் பயிற்சிப் பள்ளி (தொழிலாளர் நலவாரியம்)

கா.ஆ.மேல்நிலைப்பள்ளி

சுதந்திரம் பெற்ற பின்னர் உயர் கல்வி பெறுவதற்காக மாவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய நிலையை மாற்றிட ஆறுமுகநேரி காயல்பட்டினம் பெரியோர்கள் ஒன்றிணைந்து இப்பபள்ளியை 08.06.1955 இல் உருவாக்கினார்கள். அந்து முஸ்லீம் கிறிஸ்தவர்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக இப்பள்ளி விளங்குகிறது. அந்நாளில் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் கு.காமராஜர் 01.07.1955 இல் இப்பள்ளியைத் திறந்து வைத்தார்.

எல்.கே. லெப்பைத்தம்பிதலைவர்
கே.எஸ்.ஏசுதாச வேதமுத்துஉதவி தலைவர்
எம்.பி செய்யிது அகமது பி.ஏ.பி.எல்உதவி தலைவர்
தியாகி த.தங்கவேல்செயலாளர்
எஸ்.ஓ. ஹபீபுஉதவி செயலாளர்
ஏ.வி.தெய்வப்பழம் நாடார்பொருளாளர்

ஏ.கே. முகமது அப்துல் காதர் , காயல்பட்டினம்

எஸ்.பி. சிவசுப்பிரமணியன் பி.ஏ.பி.எல் , ஆறுமுகநேரி                                               
நூ.த. செய்கு சுலைமான் லெப்பை , காயல்பட்டினம்      
தியாகி கே.டி.கோசல்ராம் , ஆறுமுகநேரி 
எல்.எம்.எஸ். லெப்பைத் தம்பி , காயல்பட்டினம் 
தியாகி எம்.எஸ். செல்வராஜன் , ஆறுமுகநேரி 
எஸ்.இ. முகம்மது சாலிகு லெப்பை , காயல்பட்டடினம் 
கு.கந்தசாமி நாடார்  சீனந்தோப்பு 
எஸ்.கே. முகம்மது லெப்பை , காய்லபட்டினம். 
எஸ்.பொன்சாமி நாடார்  ஓடக்கரை 
வா.செ. சதக்குதம்பி ஹாஜியார் , காயல்பட்டினம் 
கே.சண்முக சுந்தரம் நாடார் , ஆறுமுகநேரி 
எம்.டி.எஸ்.முகம்மது தம்பி , காயல்பட்டினம் 
எஸ்.குரூஸ் பர்னாந்து , ஆறுமுகநேரி 
பே.சு.மா. தங்கவேல் நாடார் , பேயன்விளை

இக்கால நிர்வாகிகள்
எல்.எஸ்.இப்றாகிம்தலைவர்
கே.டி.ஜெ. பிரகாஷ்செயலாளர்
வி.கே.எம். பாஸ்கரன்பொருளாளர்
குரு. கணேசன்  எம்.ஏ எம்.பில் பி.எட்தலைமை ஆசிரியர் 
எல்.ராஜாமணிபெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்

அரசு மகளிர் நிலைப்பள்ளி

மகளிர் கல்வி வளரவேண்டும் எனில் தனித் தன்மையுடன் கல்வி நிறுவனம் தேவை என்பதை வடிவமைத்தவர் தியாகி எம்.எஸ்.செல்வராஜன் ஆவார்.பொது மக்கள் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் கூட்டுறவு சங்கங்கள் சுதந்திரப் பொராட்டத் தியாகிகள் இப்பள்ளி அமைந்திட உழைத்தனர். ஊரிலுள்ள அனைவருடைய உதவியும் இதில் உள்ளது நன்கொடையாக நிலங்கள் பெறப்பட்டன.

1965 இல் உயர்நிலைப்பள்ளியாக மலர்ந்த இப்பள்ளி 1985 இல் மேல்நிலைப் பள்ளியாக உயர்வடைந்தது.
கட்டடம் கலை அரங்கம் விளையாட்டரங்கம் ஆய்வுக்கூடம் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறையின் விடுதி கட்டுவதங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிக்கு அழகிய நுழைவு வாயிலையும் கலையரங்கம் ஒன்றினையும் சென்னை அன்னப்பழம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் எஸ்.வி. சந்திரபாண்டியன் கட்டிக் கொடுத்துள்ளார். விளையாட்டரங்கைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவரையும் விளையாட்டரங்க கலையரங்கையும் மூலக்கரை எஸ்.ஜெயச்சந்திர நாடார் ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் கட்டிக் கொடுத்து உள்ளார்.

                     “பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

                     பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
                     எட்டு மறிவினி லாணுக்கிங் கேபெண்
                     இளைப்பில்லை காணென்று கும்மியடி“
என்று பாரதியாரின் கனவு நனவாகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவியாக ச.கனியம்மாள் பல ஆண்டுகளாகப் பணியாற்றினார்கள்.

இந்து நடுநிலைப்பள்ளி - இந்து மேல்நிலைப் பள்ளி

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்படிக்கத்தொிந்தவர்கள் ஊருக்குப் பத்து பேர்தான் இருந்தனர். பெண்கள் கல்வி பற்பதைப் பெற்றோர்கள் விரும்பவில்லை. அந்நாளில் குருகுலக் கல்வி முறை ஆங்காங்கே நடைபெற்றது. ஆறுமுகநேரியில் இரண்டு திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஒன்று வடக்குத் தெருவில் மாணிக்கம் வாத்தியார் பரம்பரையினரால் நடத்தப்பட்டது. மற்றொன்று ராஜமன்னியபுரத்தில் ஒயில் அண்ணாவியாகத் திகழ்ந்த இராமலிங்கம் வாத்தியார் குடும்பத்தினரால் நடத்தப்பட்டது. வசதிப் படைதோர்கள் கல்வி பெற முடிந்தது. ஏட்டுச் சுவடிகளை வாசித்துப் பொருள் கூறினால். அது உயர்வானக் கல்வியாக இருந்தது.

அக்காலத்தில் சமயப் போதனையற்ற எல்லா சமயத்தினருக்கேற்ற கல்விக் கூடமொன்றை அமைத்திட திட்டமிட்டு 1877 இல் மேலவீடு மே.பி. அவரமுத்து நாடார் மே.பி. சுந்தரநாடார் மே.பி.துரைச்சாமி நாடார் மே.பி. சிவசுப்பிரமணிய நாடார் எஸ்.பொன்னையா நாடார் ஆகியோர் இந்து நடுநிலைப்பள்ளியைத் தொடங்கினார். இவ் உயாிய கல்விப் பணிக்கு கீழவீடு எம்.சுடலைமுத்து நாடார் நடுவீடு வே.சண்முகநாடார் ராஜமன்னியபுரம் வீரக்குமார் நாடார் சீனந்தோப்பு அ.கந்தசாமி நாடார் ஆகியோர் உறுதுணையாயினர்.
தொடக்கப்பள்ளியானது நடுநிலைப்பள்ளி என்றும் மேல்நிலைப்பள்ளி என்றும் ஆலமரமாக வளர்ந்துள்ளது. இக்கல்வி நிறுவனம் தழைத்தோங்கி நிற்கிறது. சுற்று வட்டாரத்திலிருந்து இப்பள்ளியில் பயில விருப்பத்துடன் மாணவர் வந்து செல்கின்றனர். கல்வியைக் கோயிலாகக் கருதி இதன் நிர்வாகிகள் தொண்டாற்றி வருகின்றனர்.
நிர்வாகிகள்
எம்.பி. அரவமுத்து நாடார்1877-1904
எஸ்.பொன்னையா நாடார்1904-1939
எஸ்.பி.சிவசுப்பிரமணிய நாடார் பி.ஏ. பி.எல்1939-1965
எஸ்.பி.எஸ்.பொன்னையா நாடார்1965 முதல்இன்று வரை
துணை நிர்வாகிகள்
எஸ்.ஏ.இராமச்சந்திர டோகோ1929-1939
எஸ்.ஏ.தியாகராஜ் நாடார்1965

கல்விச் சங்கத் தலைவர்

எஸ்.ஆர்.செல்வராஜ்
இந்து சரஸ்வதி நடுநிலைப் பள்ளிகளின் 
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  - கே.ஆர். மோகன் ராம்
Tags: Schools

2 comments

Leave a Reply