ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Manavalakalai » மனவளக்கலை மன்றம் - யோகா மையம்ஆறுமுகனேரியில் மனவளக்கலை மன்றம் (அறிவுத் திருக்கோயில்) யோகா மையம்
 
5
 
அறிமுகம்
மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயில் என்பது தனி மனித அமைதி மூலமாக உலக அமைதி வரவேண்டும் என்பதற்காக 1959ம் ஆண்டு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால்  நிறுவப்பட்டது. இதன் நி;ர்வாகத் தலைமையகம் சென்னை திருவான்மியூரில் உள்ளது. ஆசிரமம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் தமிழகம் முழுவதிலும்;, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும்,  வெளிநாடுகளிலும் உள்ளது.  குடும்பம் இல்லாமல் மனிதன் வாழ்வில் முழுமை பெறமுடியாது. குடும்பத்தோடு இணைந்த யோகப் பயிற்சியாகவே இப்பயிற்சிகள் அனைத்தையும் வடிவமைத்துள்ளார். இதில் சேர்ந்து பயனடைய ஜாதி, மதம், பணம், ஆண், பெண் என எந்தத் தடையுமில்லை. 

இந்த யோகா மையத்தில் கற்றுத் தரப்படுபவை:

எளியமுறை உடற்பயிற்சி:
மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் எதனால் அனுபவிக்கிறான்? இந்த உடலால் அனுபவிக்கிறான். அப்படியானால் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியமா? இல்லையா? தினமும் வீட்டில் சமையல் செய்கிறோம். அடுத்த நாள் மீண்டும் சமையல் செய்ய வேண்டுமானால் அந்த பாத்திரங்களை சுத்தம் செய்தால்தானே மீண்டும் உபயோகிக்க முடியும். அது போலவே மனிதன் தினமும் இந்த உடலால் பலவற்றையும் அனுபவிக்கிறான். மீண்டும் அந்த உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் எளிய முறை உடற்பயிற்சி அவசியமாகிறது. இங்கு இலவசமாகக் கற்றுத் தரப்படும் இந்த எளிய முறை உடற்பயிற்சியை 8 வயது குழந்தை முதல் 80 வயதான பெரியவர்கள் வரை யாரும் செய்யும் வகையில் இயற்கையையொட்டி மனதோடு இணைந்த பயிற்சியாக மிக எளிமையாக வடிவமைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. இந்த உடற்பயிற்சியை அரை மணிநேரத்தில் எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் உடல் உறுப்புக்களை மட்டுமே வைத்து செய்யப்படுவதால் பொருட் செலவு என்பது முற்றிலும் கிடையாது. கடினமான ஆசனங்கள் எதுவும் கிடையாது ஆனால் முழுப்பலனையும் இந்த எளியமுறை உடற்பயிற்சியினால் அடைய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். உடலில் உள்ள உள்உறுப்புகளான குடல், சிறுநீரகம், வயிறு, நுறையீரல், இருதயம் என அனைத்துக்கும் இப்பயிற்சி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள், பிரஷர் உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை முறையாக செய்து பெருமளவில் பயனடைந்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமானதாகும்.
காயகல்ப பயிற்சி:
உயிர் இருந்தால்தானே உடலுக்கு மதிப்பு. உடலைவிட்டு உயிர் பிரிந்தால் மனிதனுக்குப் பெயர் பிணம். உடனே உயிருள்ளவர்கள் கேட்கும் கேள்வி எப்போது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதுதான். எனவே உடலில் உயிரை வளமாக வைத்துக் கொள்ளுதல்  அவசியம். அதற்கான பயிற்சியே காயகல்ப பயிற்சி என்பதாகும். காயம் என்றால் உடல், கல்பம் என்றால் உறுதி. உடலை  உறுதியாக வைத்துக் கொள்வதற்காகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்கள் இளமையோடு இருப்பதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த முனிவர்கள் கடினமான வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வைத்திருந்;ததை 40 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையில் ஆண் பெண் அனைவரும் எளிதாக காலை மாலை வேளைகளில் சுமார் 3 நிமிட நேரத்தில் செய்ய முடியும் அளவுக்கு எளிமைப் படுத்தி வடிவமைத்துள்ளார். இப்பயிற்சியைக் கற்று முறையாக செய்து வருவதன் மூலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், முகப் பொலிவுடனும் வாழலாம்.
தியானப்பயிற்சி:
உடலும், உயிரும் நன்றாக இருந்தால் போதுமா? மனமும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? மனதின் உயர்வே மனிதனின் உயர்வு அல்லவா? எனவே மனதை ஒருமுகப் படுத்தி சிந்தனைத் தெளிவோடு விழிப்புணர்வோடு இருக்கும் பயிற்சியாக 9 வகையான தியானப் பயிற்சிகள் உள்ளது. இப் பயிற்சி மூலம் அதிக பட்சமான 40 மன அலைச்சுழலை 1 முதல் 3 வரை குறைக்க முடியும். இதனால் இயற்கை ரகசியங்கள் அனைத்தும் மனதிற்குத் தெரியவரும்.( மனம் அலைபாயாமல் அமைதியாக இருக்க உதவும்)
தற்சோதனைப் பயிற்சி:
உடல், உயிர், மனம் நன்றாக இருந்தால் போதுமா? குணநலம் உயர வேண்டாமா? குணநலம் உயர்ந்தால்தானே மனிதன் தன்னை உணர்ந்து தான் சமுதாயத்தில் இருந்து பெற்ற பயன்களுக்கு ஈடாக தன் கடமையைச் செய்ய முடியும். இன்று வரை சமுதாயத்தில் நீ யார்? எனக்கேட்டுத்தான் பழகி உள்ளோம். நான் யார்? என நம்மையே கேட்பதன் மூலம் நாம் குணநலத்தில் உயர, சமுதாயத்தில் உயர்ந்த புகழோடு வாழ தற்சோதனைப் பயிற்சிகள் கற்பிக்கப் படுகிறது.
உடல் நலத்திற்கு : எளிய முறை உடற்பயிற்சி
உயிர் வளத்திற்கு : காயகல்ப பயிற்சி
குணநலத்திற்கு : தற்சோதனைப் பயிற்சி
சினம் : தவிர்க்கப் படவேண்டும். சினத்தால் எந்தக் காரியமும் வெற்றியடையாது
ஆசை : ஒழிக்கக் கூடாது, ஒழிச்கவும்; முடியாது. ஆனால்  ஆசையை சீரமைக்க வேண்டும்
கவலை : கவலைப் பட்டு ஆகப் போவது ஒன்றும் இல்லை எனவே கவலையை ஒழிக்க வேண்டும். 

இன்று உலகில் காணப்படும் அனைத்துத் துன்பங்களுக்கும், குற்றங்களுக்கும் காரணம் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, எண்ணம் தான்.  பேராசையை நிறைந்த மனமாகவும், சினத்தை மன்னிக்கும் தன்மையாகவும், கடும் பற்றை ஈகையாகவும், உயர்வு தாழ்வு மனப் பான்மையை சமநோக்காகவும், முறையற்ற பால்கவர்ச்சியை கற்பு நெறியாகவும், எண்ணத்தை உயர்ந்த எண்ணமாகவும் மாற்றும் ஓர் அற்புதமான இடம் மனவளக்கலை மன்றம்.
இதற்கான பயிற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியம் இதைக் கற்றுக் கொள்வதற்கு வேறு எங்கேயும் செல்ல வேண்டாம் ஆறுமுகநேரியிலேயே கடந்த 7 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்பு முகவரி:
ஆறுமுகநேரி அறிவுத்திருக் கோயில்
சந்தைக்கு மேற்புறம்,
சிவன் கோவில் அருகில் மற்றும் ஜெயின்நகர் அருகே தொழிற் சங்கம்
நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணிவரை
தகுதி: 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் யாவரும். ஜாதி மத பேதமில்லை
பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்
தொலை பேசி எண்கள்: பொறுப்பாசிரியர்: 04639-282031 , 9486990236 ,9486491411
செயலாளர்: 9842170579 , 9894926348
குறிப்பு:
தமிழக அரசு இதன் சிறப்புகளையும் நன்மைகளையும் அறிந்து பள்ளிகள், கல்லூரிகளில் பாடத்திட்டமாக அறிவித்து டிப்ளாமா, பி.ஏ, மற்றும் எம்.ஏ வகுப்புகள் என நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்காப்பு: அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாது காப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க.
 

0 comments

Leave a Reply